விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகள்

news18
Updated: September 12, 2018, 10:44 PM IST
விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகள்
கோப்புப் படம்
news18
Updated: September 12, 2018, 10:44 PM IST
சென்னையில் 2,500 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது முதல் ஊர்வலம் மற்றும் கடலில் கரைப்பது வரை பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு விதித்துள்ளது.

சென்னையில் 2,500 சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும்வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இதனிடையே, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

அந்த விதிமுறைகள் வருமாறு:

 • விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும்.

 • களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 • இயற்கை சாயம் பூசப்பட்ட சிலைகளாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • Loading...
 • ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும்.

 • காலை மற்றும் மாலை நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.

 • பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகளை பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும்

 • அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் சார்ந்த விளம்பர பதாகைகள் இருக்கக்கூடாது.

 • வகுப்புவாத வெறுப்பை தூண்டும் வகையில் முழக்கம் இடுவதையோ, பிற மதத்தின் உணர்வுகளை புண்படுத்துவதையோ அனுமதிக்க முடியாது.

 • பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 5 நாட்களுக்குள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்

 • மாவட்ட நிர்வாகத்தினரோடு இணைந்து விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை தேர்வு செய்யவேண்டும்

 • மினி லாரி மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்

 • ஊர்வலம் செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது - ஆகிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...