ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு தமிழக அரசே பொறுப்பு"

"உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு தமிழக அரசே பொறுப்பு"

தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.பி.

தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்.பி.

உழவர் உதவி நிதி திட்டத்தைச் செயல்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடாளுமன்றத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், அதில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் நேற்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் உழவர் உதவி நிதி திட்டத்தில், பெருமளவு மேசடிகள் நடைபெற்றுள்ளதை தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read: பள்ளிக்கட்டணம் செலுத்தாத குற்றவுணர்வு.. ஆன்லைன் பாடங்களால் குவிந்த சுமை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவரை 47 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் செர்ந்த 19 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உழவர் உதவி நிதி திட்டத்தைச் செயல்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு எனவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

First published:

Tags: Corruption, Tamilachi ThangaPandian