சித்தா, ஆயூர்வேதா போன்ற இந்திய மருத்துவமுறைகளை தமிழக அரசு மிக சிறப்பாக கையாண்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் அதிக நாட்கள் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைந்ததிருந்தார். அவ்வளவு காலம் சேலத்தில் இருந்தவர் என்ன செய்தார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி, யோகா போன்ற இந்திய மருத்துவமுறைகளை தமிழக அரசு மிக சிறப்பாக கையாண்டு கொண்டுள்ளது அதன் மூலம் 27,466 பேர் நலம் பெற்றுள்ளனர். அதில் ஒரு உயிரிழப்பும் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (ஒஎம்ஆர்) துரைப்பாக்கத்தில் இம்காப்ஸ் சித்தா மருத்துவமனை நிர்வாகம் சித்தா கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36,184 ஆக இருந்தது இன்று 7,800 ஆக குறைந்துள்ளது.

  கொரோனா காலத்தில் அதிக நாட்கள் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைந்ததிருந்தார்.
  அவ்வளவு காலம் சேலத்தில் இருந்தவர் என்ன செய்தார்?

  ஆனால் திமுக ஆட்சியில் 50 படுக்கை கொண்ட சித்தா மருத்துவமனை சேலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே சேலத்தில் தான் ஒரே இடத்தில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் உள்ளது.

  அமெரிக்கா, இஸ்ரேலில் பாதிப்பு குறைந்ததுக்கும் தாங்களே காரணம் என்றவாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியை குற்றம்சாட்டுகிறார்.

  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 24 ஆம் தேதி சேலம் சென்று திமுக அமைத்துள்ள சூப்பர் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சித்த மருத்துவமனை மற்றும் ஸ்டீல் பிளேட் மையத்தை பார்த்து விட்டு பின் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என குற்றம்சாட்டட்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சித்தா, ஆயூர்வேதா, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவமுறைகளை தமிழக அரசு மிக சிறப்பாக கையாண்டு கொண்டுள்ளது. அதன் மூலம் 27,466 பேர் நலம் பெற்றுள்ளனர். அதில் ஒரு உயிரிழப்பும் இல்லை.

  நேற்று மாலை வந்த 3 லட்சத்து 14 ஆயிரத்தை சேர்த்து 8 லட்சம் அளவு கொரோனா தடுப்பூசியானது இருப்பு உள்ளது.

  மாநில நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வைக்கக் கூடாது என்பது விதி. ஆனால் கடந்த 10 வருடமாக அதிமுக ஆட்சியில் சுங்கச்சாவடியில் வசூல் செய்து வந்தனர் என்று குற்றம்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுங்கச்சாவடி அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் 8000க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சைக்கு பாதித்துள்ள நிலையில் தமிழகத்தில் கருப்புபூஞ்சை நோயால் 2482 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதில் 120 பேர் குணமடைந்துள்ளார்கள்.

  கரும்பூஞ்சைக்கு 1 லட்சம் மருந்துகள் கையிருப்பில் உள்ளது, தொடக்கத்திலேயே சிகிச்சை பெற்றால் குணமடைய செய்யலாம்.

  ரெம்டெசிபர் மருந்துபோல் கருப்புபூஞ்சை மருந்தை ஆன்லைன் மூலமாக பெறலாம் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் சார்பில் மருந்துகள் அளிக்கப்படும் என்றார்.

  செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்
  Published by:Esakki Raja
  First published: