விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் சோதனை? சர்ச்சையை ஏற்படுத்திய தொற்று எண்ணிக்கை

சுகாதாரத்துறை வெளியிடும் தகவலின்படி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் சோதனை நடத்தப்படுவது போன்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் சோதனை? சர்ச்சையை ஏற்படுத்திய தொற்று எண்ணிக்கை
கோப்புப்படம்
  • Share this:
வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படாத நிலையில், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை மட்டும் சுகாதாரத்துறை தெரிவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில் விமான நிலையங்களுக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை விவரம் குறிப்பிடப்பட்டு வருகிறது.

அத்துடன் தொற்று பாதித்தவர்கள் எந்தெந்த மாநிலங்களில் இருந்து திரும்பியுள்ளனர் என்ற தகவலும் இடம் பெற்று வருகிறது. ஆனால், விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப நிலை மட்டும் பரிசோதிக்கப்படுவதும், தொற்று அறிகுறி இருந்தால் மட்டும் கொரோனா சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.Also read... மதுரை கொரோனா மையத்தின் மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

இதனால், சுகாதாரத்துறை வெளியிடும் தகவலின்படி விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் சோதனை நடத்தப்படுவது போன்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading