Home /News /tamil-nadu /

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விரைவில் சிபிஐக்கு மாற்றப்படும் - தமிழக அரசு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விரைவில் சிபிஐக்கு மாற்றப்படும் - தமிழக அரசு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தன்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக நக்கீரன் தரப்பு உறுதியளித்திருந்தது.

  • News18
  • Last Updated :
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வரும் 30ம் தேதி நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி அனுப்பிய சம்மனை எதிர்த்து நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

    அந்த மனுவில் தன்னிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக நக்கீரன் தரப்பு உறுதியளித்திருந்தது.

    இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கை சிபிஐ க்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு எப்போது ஒப்படைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது. அதுவரை சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 1-ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Pollachi

    அடுத்த செய்தி