ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை - தமிழக அரசு

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை - தமிழக அரசு

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆன் லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை எப்படி பின்பற்றப்படுகிறது? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துவது தொடர்பாக கேள்வி நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.

Also read... 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், முன்கூட்டியே பதிவு செய்த வகுப்புகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி வழங்கப்படுவதாகவும், தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு என்றும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Online class