தீவிரமடையும் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: வாக்குச்சீட்டுக்கான பணி தொடக்கம்!

ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு, வரும் 20-ம் தேதி கடைசி நாள் எனவும், இது 2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு வகை காகிதங்களுக்கான டெண்டர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated: September 13, 2019, 10:58 AM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டுக்கான காகித கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளதால் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சிகள் இருக்கின்றன. அதுபோல கிராமப் பகுதிகளில் 12,524 ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றிய அமைப்புகளும் இருக்கின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. நீதிமன்ற வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. தனி அதிகாரிகள் மட்டும் நிர்வாகத்தை கவனிப்பதால், உள்ளாட்சி நிர்வாக பணிகளில் தொய்வும் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது.

அதனால் அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு தேவைப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

அதேபோல், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென ஓட்டுச்சீட்டு அச்சிடுவது உள்ளிட்டவற்றுக்காக காகித கொள்முதல் பணியை அரசு அச்சுத்துறை தொடங்கியுள்ளது.

வெளிர் நீல நிறம் 30 டன், பிங்க் நிறம் 56 டன், எம்ஜி ரிப்ட் கிராஃப்ட் காகிதம் 45 டன் கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு, வரும் 20-ம் தேதி கடைசி நாள் எனவும், இது 2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு வகை காகிதங்களுக்கான டெண்டர் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்