மாணவர்களில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது - தமிழக அரசு விளக்கம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளதாகவும் எனவே அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தங்களது சொந்தமாக திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது - தமிழக அரசு விளக்கம்
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: November 21, 2020, 1:12 PM IST
  • Share this:
மாணவர்களில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரனோ பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புக்களுக்கு, இறுதிப்பருவதேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்குகளுகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது . அந்த பதில் மனுவில், கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர் சமுதாயமே எதிர்பாராத வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும் மாணவர்கள் ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் இந்த அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டு விடுதிகள் காலி செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பப் பட்டதாகவும் குறிப் பிட்டுள்ளார். பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளிலேயே தங்களுடைய புத்தகங்கள்,நோட்டுகள் மடிக்கணினி உள்ளிட்ட அனைத்தையும் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதாகவும் கூறியுள்ளார். கல்லூரிகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது சுட்டிக்காட்டியுள்ளார்.Also read... அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்அனைத்து பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து, குழு அமைக்கப்பட்டு, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதாக பதில் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த ஒரு விதிமுறை மீறல் கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும் என்றும் இதில் திருப்தி அடையாத மாணவர்கள் மீண்டும் தேர்வுகளை எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகள் என்பது ஒரு அறிவுரையின் அடிப்படையிலேயே உள்ளதாகவும் எனவே அதன் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் தங்களது சொந்தமாக திட்டத்தை வகுத்துக் கொள்ள முடியும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது எந்த வகையிலும் மாணவனின் எதிர்காலத்தை பாதிக்காது என்றும் மேலும் அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது ஆகாது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் பல்கலைக்கழகளுக்கு அதிகாரம் உள்ளதால் தான் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading