Home /News /tamil-nadu /

சவாலான பேரிடரை அரசு திறமையாக கையாண்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

சவாலான பேரிடரை அரசு திறமையாக கையாண்டுள்ளது: அமைச்சர் காமராஜ்

சீரமைப்பு பணிகளை பார்வையிடும் அமைச்சர்

சீரமைப்பு பணிகளை பார்வையிடும் அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலமைச்சரிடம் கூறி விரைவில் புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் காமராஜ்.

  • News18
  • Last Updated :
கஜா புயல் கரையை கடந்துள்ள நிலையில், சவாலான பேரிடரை அரசு திறமையாக கையாண்டுள்ளது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம் தெரிவித்தார்.

திருவாரூரில் கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தபின் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கஜா என்னும் மிகவும்  சவாலான பேரிடரை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது. கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 5,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சுமார் 28,500 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மின் கம்பங்களை சரி செய்வதற்காக திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதலமைச்சரிடம் கூறி விரைவில் புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 202 மையங்களில் 1,11,792 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 471 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் காமராஜ்.

கஜா புயல் பாதிப்புகள் தொடர்பான செய்திகளை படிக்க, வீடியோக்களை காண, படங்களை பார்க்க கிளிக் செய்க

News18 Tamil App - செய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி