Home /News /tamil-nadu /

குட்கா ஊழல் வழக்கு - இரு சுகாதாரத்துறை அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதி

குட்கா ஊழல் வழக்கு - இரு சுகாதாரத்துறை அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதி

சிபிஐ

சிபிஐ

குட்கா வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    குட்கா ஊழல் தொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கிய உடன் இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

    ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக அது குறித்து எந்த முடிவு எடுக்கப்படாத நிலையில், தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதையடுத்து தமிக சுகாதார அதிகாரிகளான செந்தில் முருகன், மற்றும் சிவக்குமாரிடம் சட்டவிரோத பரிவர்த்தணை தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்க உள்ளனர்.

    Also read... நல்லக்கண்ணு பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு - முத்தரசன் போலீசில் புகார்

    தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்த நிலையில், 2016ல் சென்னை ஒரு குடோனில் ஏராளமான ஆவணங்களும், குட்கா விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக எழுதப்பட்ட டைரியும் கிடைத்தது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Gutkha Scam

    அடுத்த செய்தி