கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளது - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளது - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
கோப்புப் படம்
  • Share this:
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் பொது செயலாளர் கோபிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொரோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீசியன் பணியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் லேப் டெக்னீசியன் மூலமாகவே மாதிரிகளை எடுக்க வற்புறுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ப்ளஸ் 2-க்கு பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள லேப் டெக்னீஷியன்கள், உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை செய்யக்கூடாது என விதிகள் உள்ளதாகவும், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீசியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்த படுகிறார்கள் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Also read... யாரெல்லாம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களுக்கு தகுதி உள்ளது எனவும் கடமையை செய்வதில் இருந்து அவர்கள் தவறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading