• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்று

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்று

தென்னங்கன்றுகள்

தென்னங்கன்றுகள்

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை மற்றும் வாழைக்கன்றுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் தாக்கியதன் விளைவாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  நான்கு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்தன.  இதனால் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்நிலையில் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் கர்நாடகாவிடமிருந்து லட்சக்கணக்கான தென்னை மற்றும் வாழைக்கன்றுகளைப் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வேளாண்துறை மூலமாக தென்னங்கன்று மற்றும் வாழைக்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.  மேலும், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று விவரங்களைக் கூறி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: