HOME»NEWS»TAMIL-NADU»tn govt has been ordered to involve paramedical students in corona work to deal with the situation vin sar
பாராமெடிக்கல் மாணவர்கள் கொரோனா பணிக்கு வரவேண்டும் - தமிழக அரசு உத்தரவு..
அவசர காலத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தகுதிவாய்ந்த பாராமெடிக்கல் தொழில்நுட்பர்கள் பணிக்காக காத்திருக்கும் சூழலில் கூடுதல் பணிகளுக்கு அவர்களை பணியமர்த்தலாம் என தெரிவித்தார் காளிதாஸ்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்போவதாக அரசு கணித்துள்ள நிலையில், நிலைமையை சமாளிக்க பாராமெடிக்கல் மருத்துவ மாணவர்களையும் கொரோனா பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வக தொழில்நுட்பர்கள், எக்ஸ் ரே தொழில்நுட்பர்கள், மயக்கவியல் தொழில்நுட்பர்கள் என பல பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கடலூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் என அரசு கணித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அரசு நிறுவனங்களில் பயிலும் அனைத்து பாராமெடிக்கல் மாணவர்களும் கல்லூரியில் மீண்டும் சேர வேண்டும். அவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்தலாம்.
மாணவர்கள் சேராவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் சரியான நேரத்தில் கிடைக்காது என்றும் எச்சரித்திருந்தார்.
பாராமெடிக்கல் படிப்புகள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தான். ஒரு ஆண்டு முடித்த மாணவர்களை கொரோனா பணியில் அமர்த்துவது தேவையற்றதும் ஆபத்தானதும் என ஆய்வக தொழில்நுட்பர்கள் சங்கம் சார்பாக காளிதாஸ் தெரிவிக்கிறார்.
அவசர காலத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தகுதிவாய்ந்த பாராமெடிக்கல் தொழில்நுட்பர்கள் பணிக்காக காத்திருக்கும் சூழலில் கூடுதல் பணிகளுக்கு அவர்களை பணியமர்த்தலாம் என தெரிவித்தார்.