முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறை விரைவில் அறிமுகம் - தமிழக அரசு

அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறை விரைவில் அறிமுகம் - தமிழக அரசு

அரசுப்பேருந்து சென்னை

அரசுப்பேருந்து சென்னை

அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக சென்னை ,மதுரை, கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச் சீட்டு முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கும் காதித பயண சீட்டு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக சென்னை ,மதுரை, கோவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Also read... தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளதாகவும், இந்த தானியங்கி பயணச் சீட்டு முறை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Govt Bus, TN Govt