HOME»NEWS»TAMIL-NADU»tn govt has announced that a committee will be set up to approve and monitor tenders vin

பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் டெண்டர்களை கண்காணிக்க புதிய குழு - தமிழக அரசு அறிவிப்பு

டெண்டர் வழங்குவதற்கான அனுமதியை வழங்கும், பதிவு குழுவை தமிழக அரசு உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் டெண்டர்களை கண்காணிக்க புதிய குழு - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • News18
  • Last Updated :
  • Share this:

பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் டெண்டர்களுக்கு அனுமதி வழங்கவும், கண்காணிக்கவும் புதிய குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா- சீனா எல்லை பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் டெண்டர்களை நிறுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த டெண்டர்களை, குறிப்பிட்ட சில நாடுகளில் தலைமையகம் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு, வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பொதுத்துறை நிறுவனங்கள் டெண்டர் அறிவிக்கும் போது, அது பதிவு குழுவின் ஒப்புதல் பெற்ற பின்னர் தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் வழங்குவதற்கான அனுமதியை வழங்கும், பதிவு குழுவை தமிழக அரசு உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்படும் இந்த குழுவில், நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர்களின் பரிந்துரைப்படி, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு குழு, டெண்டருக்கு விண்ணப்பம் செய்வது எப்படி என்பது தொடங்கி விண்ணப்பம் வழங்குவது வரை அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ளும்.

டெண்டருக்கு ஒரு நிறுவனம் விண்ணப்பித்தால், முதலில் அரசியல் ரீதியிலாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்படும், பின்னர் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு தொடர்பான ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Also read... இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..

இரண்டு அமைச்சகங்களிடம் இருந்தும் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே, இந்த டெண்டருக்கான விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்படும்.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த விண்ணப்பங்களை ரத்து செய்ய இந்த குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படும் போது, அந்த டெண்டர் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தலைமை செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளருக்கு அதன் நிலை குறித்து, இந்த பதிவு குழு அறிக்கை சமர்பிக்கும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: