• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் நிலங்கள் எவ்வளவு? - அறநிலையத்துறை தகவல்

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் நிலங்கள் எவ்வளவு? - அறநிலையத்துறை தகவல்

கோவில் நிலம்

கோவில் நிலம்

இணையதளம் சென்று பொதுமக்கள் கோயில் நிலம் மீட்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

  • Share this:
    மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளும் வகையில் பொதுமக்கள் பார்வைக்காக வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட்டது இந்து சமய அறநிலையத்துறை.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் தமிழக அரசால் மீட்கப்பட்டு வருகின்றன

    மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 100க்கும் அதிகமான திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலங்கள் எவ்வளவு ? எந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ? மதிப்பு எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிட்டது இந்து சமய அறநிலையத்துறை

    https://hrce.tn.gov.in/hrcehome/landretrieval_search.php இணையதளம் சென்று பொதுமக்கள் கோயில் நிலம் மீட்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

    ஏற்கனவே திருக்கோயிலுக்கு சொந்தமான நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலம் மீட்பு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: