Home /News /tamil-nadu /

ஊரடங்கில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - தமிழக அரசு

ஊரடங்கில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி - தமிழக அரசு

மாதிரி படம்

மாதிரி படம்

முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்,

    ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வரும் ஞாயிற்றுகிழமை ஜனவரி 9-ம் தேதி முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு நாளில் போட்டித்தேர்வுகளுக்கு செல்லும் நபர்களுக்கு அனுமதி இருக்குமா அல்லது தேர்வு தேதிகளில் எதேனும் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

    Also Read: பொங்கல் முடிந்து ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு..?

    இதுதொடர்பாக அரசு தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி/டி.என்.பி.எஸ்.ஸி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    இதுபோன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Competitive Exams, Corona, Covid-19, Lockdown, Night Curfew

    அடுத்த செய்தி