கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த தற்காலிக கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் - தமிழக அரசு!

கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த தற்காலிக கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் - தமிழக அரசு!

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள 2894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 384 பணிகள் காலியாக உள்ளதாகவும், அதை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 2715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கபட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வகுமார் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,டெங்கு நோயை பரப்பும் கொசு புழுக்களை உண்ணக்கூடிய மீன்களை ஏரி குளங்களில் வளர்ப்பதாகவும்,
வீடுகள் மற்றும் தெருக்களில் புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூர்,கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 2894 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில் 384 பணிகள் காலியாக உள்ளதாகவும், அதை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... Explainer: கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் பிரபலமாகும் Buy now, pay later திட்டம் - இதில் இருக்கும் சிக்கல் என்னென்ன?

கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்த 2715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய் சிகிச்சைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த படுவதாகவும், டெங்கு அபாயம் இருக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: