முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவர் நியமனம்..

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவர் நியமனம்..

மணிகண்டன் பூபதி

மணிகண்டன் பூபதி

முதன்முறையாக பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒருவர் முதன்மை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலராக மணிகண்ட பூபதி என்பவரை நியமனம் செய்து மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி தொலைகாட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய காலம் முதல் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளே கல்வி தொலைகாட்சியை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக பள்ளிக்கல்வித் துறையை சாராத ஒருவர் முதன்மை செயல் அலுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், மணிகண்ட பூபதி 2 ஆண்டு காலம் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரது செயல்பாடுகளை பொறுத்து அவரது பணி நீட்டிக்கப்படும் என்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

First published:

Tags: Education, School education department, TN Govt