ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.

மேலும் தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராக சென்று சிலையை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருந்தத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

பல இடங்களில் விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றும் வீடியோ பார்ப்பது வருத்தமாக உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட சில கட்டுப்பாடுகள் விதித்து அரசு வழிகாட்டுதலோடு, அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பை இன்றே முதல்வர் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Also read: கடைகள் அடைத்தபிறகு மது பாட்டில்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி

அதற்கு விளக்கமளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை எனவும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தான் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பேசினார்.

மேலும், கொரானா பரவல் கட்டுக்குள் இன்னும் வரவில்லை எனவும் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாட, ஒன்று கூடி ஊர்வலமாக செல்ல மட்டும் தான் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரவர் வீடுகளில் உரிய வழிமுறைகள் பின்பற்றி சிலை வைத்து கொண்டாடலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: News On Instagram, TN Assembly, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி