அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 1:01 PM IST
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: December 7, 2018, 1:01 PM IST
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 18,600 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, புறநோயாளிகளின் சிகிச்சையை நாளை முதல் முற்றிலுமாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகளின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட ஒருநபர் குழு என்ன நிலையில் உள்ளது? அது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Also See..

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...