அரசு மருத்துவமனை மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் இன்று அதிகாலையில் மாரடைப்பில் காலமானார். அவருக்கு வயது 52.
25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்தவர் லட்சுமி நரசிம்மன், அரசு மருத்துவமனை மருத்துவ சங்கத் தலைவராகவும் இருந்தார்.
அண்மையில் நோயாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்களை உயர்த்துவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்தது.
7 நாட்கள் நடந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் மிக முக்கியமானவர் லட்சுமி நரசிம்மன். போராட்டத்தை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 120 டாக்டர்களை தொலைதூரத்துக்கு இடமாற்றம் செய்தது தமிழக அரசு. தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய அவர் ராமநாதபுரம் அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சக மருத்துவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.