தீபாவளிக்கு முந்தைய நாள் அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு

தமிழக சட்டசபை

தீபாவளி பண்டிகையைக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை, செவ்வாய் கிழமை தீபாவளி என்பதால் இடையில் திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் வேலை நாளாக இருந்தது.

பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்ததை அடுத்து, தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருக்கும் விதமாக திங்கட்கிழமை (நவம்பர் 5) பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எனவும், அதற்குப் பதிலாக நவம்பர் 10-ம் தேதி வேலை நாள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு மாவட்ட, சார்நிலைக் கரூவூலங்கள் செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்..

தீபாவளி சிறப்புச் சலுகை: 10 ஜி.பி டேட்டா அள்ளித்தரும் ஜியோ!

அழகுச்சிலைகளாய் பவனி வந்த பாலிவுட் நடிகைகள்: புகைப்படத் தொகுப்பு

Also see..

Published by:Sankar
First published: