முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை - தமிழக அரசு விளக்கம்

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை - தமிழக அரசு விளக்கம்

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

  • 1-MIN READ
  • Last Updated :

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்க கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் புதிய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், இந்த விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Also see...

First published:

Tags: Madras High court, Minister sp velumani, TN Govt