முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதல்

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்ததாக கூறி திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு தொட

  • Last Updated :

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்ததாக கூறி திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், “இந்தியாவையே உலுக்கிய வியாபம் ஊழலுக்கு அடுத்து டி.என்.பி.எஸ்.சி ஊழல் தமிழகதை உலுக்கியிருப்பதாகவும், இந்த துறையை சார்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு சம்பந்தப்பட்டிருப்பதற்கான முழு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரை முறையாக சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து ஜெயக்குமார், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்தி வருவதாகவும், எனவே தயாநிதிமாறன் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு அனுமதியளிக்கும்படி தமிழக பொதுத்துறையை கோரியிருந்தார்.

இந்நிலையில் அதற்கான அனுமதியை தமிழக அரசின் பொதுத்துறை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் அவதூறு வழக்கு தொடரப்பட உள்ளது.

மேலும் படிக்க: CAA-க்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய கையெழுத்து இயக்கப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

top videos

    First published:

    Tags: Dayanidhi Maran