போராட்டத்தால் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் - உத்தரவை ரத்து செய்த அரசு

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் (கோப்புப்படம்)

போராட்டம் நடத்தியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களின் கோரிக்கையை அடுத்து, அந்த உத்தரவை அரசு ரத்து செய்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம். கிராமப்புறத்தில் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் ஒரு வார காலம்  அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (FOGDA ) சார்பில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து போராட்டம் நடத்திய கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் 118 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் 300 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள்இதை ரத்து செய்யக்கோரி மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அண்மையில் மருத்துவர்களின் குழந்தைகளும் உருக்கமாக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நீயூஸ் 18 தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், அரசு மருத்துவர்களின்  பணியிட மாறுதல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களுக்கு மீண்டும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதை, குடும்பத்தை விட்டு பிரிந்து தொலை தூரங்களில் தவித்த அரசு மருத்துவர்கள் மகிழ்ந்து, வரவேற்றுள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Sankar
First published: