Home /News /tamil-nadu /

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்… என்ன காரணம்?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம்… என்ன காரணம்?

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

மாதந்தோறும் மின்சார கட்டணம் கணக்கெடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போது மின்கட்டண உயர்வு, பரந்தூர் விமான நிலையம், ஆன்லைன் ரம்மிக்கு தடை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேதி மாற்றப்பட்டு 29-ம்தேதி திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    அந்த கூட்டத்தில், பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையம் மற்றும் புதிய தொழில் கொள்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஜெ. மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முழு அறிக்கை தமிழக அரசிடம் நாளை தாக்கல்

    இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு இன்னும் சில காலமே இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் பருவமழையால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. திமுக அரசின் மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை, பால் கட்டணம் உயர்வு உள்ளிட்டவை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

    அரசு விழாக்கள் எங்களது புகழ் பாட அல்ல... மக்களுக்கு என்ன செய்கிறோம் என்பதை விளக்கும் விழாக்கள் - முதல்வர் ஸ்டாலின்

    குறிப்பாக மாதந்தோறும் மின்சார கட்டணம் கணக்கெடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பிரச்னைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Tamilnadu government

    அடுத்த செய்தி