• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குடியரசு தின விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

குடியரசு தின விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து

மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காண மாணவர்கள், பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் எனவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்தாண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெறும். இதில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெரும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தமிழக அரசு தவிர்த்துள்ளது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று அரசு அதிகாரிகள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் மாண்புமிகு ஆளுநர் ஜனவரி திங்கள் 26-ஆம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

மேலும் படிக்க... பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம்.. மும்பையில் லிட்டர் ரூ 92.04க்கு விற்பனை

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழல் நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில், கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: