காஞ்சிபுரத்தில் குவியும் பக்தர்கள்... பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

அத்திவரதர் நிறைவு நாள் வைபவத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 13, 14, 16-ல் காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் குவியும் பக்தர்கள்... பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை!
அத்திவரதர்.
  • News18
  • Last Updated: August 7, 2019, 3:30 PM IST
  • Share this:
அத்திவரதர் வைபவத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் வைபவம் இன்னும் 10 நாட்களே நடைபெறும் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த இரு தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.  நேற்று நள்ளிரவு 2.30 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன், அத்திவரதரை தரிசனம் செய்ய 2 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை இருப்பதாக கூறினார். மேலும், ஆகஸ்ட் 16 மற்றும் 17-ம் தேதிகளில் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், ஆகஸ்ட் 17 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனவும் அறிவித்தார்.ஆகஸ்ட் 17-ம் தேதி நண்பகல் 12 மணியுடன் பொது தரிசன வழியான கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டு மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.இந்நிலையில், அத்திவரதர் வைபவம் தொடர்பாக முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அத்திவரதர் நிறைவு நாள் வைபவத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 13, 14, 16-ல் காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அரசு அறிவித்த 13, 14, 16 தேதிகளை தவிர 10 மற்றும் 11-ம் தேதி சனி, ஞாயிறு என்பதாலும் 15-ம் தேதி சுதந்திர தினமும், 17 மற்றும் 18-ம் தேதி சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து காஞ்சிபுர பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை உள்ளது.

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading