Home /News /tamil-nadu /

பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் வழங்குவோருக்கு மூன்றரை மடங்கு இழப்பீடு; வீடுகட்ட இடமும் பணமும் அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் வழங்குவோருக்கு மூன்றரை மடங்கு இழப்பீடு; வீடுகட்ட இடமும் பணமும் அறிவிப்பு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன்

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன்

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது விவசாய நிலங்களைத்தான் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. – அமைச்சர் எ.வ.வேலு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பரந்தூர் விமான நிலையம் கட்ட இடம் வழங்கும் மக்களுக்கு,  மூன்றரை மடங்கு இழப்பீட்டு தொகையுடன் வீடு கட்ட இடமும் பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    பரந்தூர் விமான நிலைய கட்டுமானம் தொடர்பாக 13 கிராம மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 13 கிராம மக்களில் பலர் கூடுதல் இழப்பீடும், வேலைவாய்ப்பும் கேட்டதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து, இடம் வழங்கும் அனைவருக்கும் மூன்றரை மடங்கு இழப்பீட்டு தொகையுடன், வீடுகட்ட மாற்று இடமும் அதற்கு தனியாக பணமும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியாகும் தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் வேலு குறிப்பிட்டார்.

    நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது – சீமான் ஆவேசம்

    மேலும் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு கூடுதலாக மதிப்பு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது விவசாய நிலங்களைத்தான் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஏகநாகதபுரம், பரந்தூர் கிராம மக்கள் ஒரு ரன்வேயை மாற்றி அமைக்க முடியுமா என கோரிக்கை வைத்தனர்.இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துபேசி தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளோம்..

    மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு இன்னொரு விமான நிலையம் தேவைப்படுகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் வழங்குபவர்களுக்கு 3.5 மடங்கு பணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நிலம் வழங்கப்படும் மக்களுக்கு, இடமும், வீடு கட்ட பணமும் அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும். மக்கள் விரும்புகின்ற வகையில், ஒரே இடத்தில் அவரகளுக்கு இடம் ஒதுக்கித் தரப்படும்.

    அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளேன் - ஓபிஸை சந்தித்த பின் பாக்யராஜ் அறிவிப்பு

    விமான நிலையம் அமைய உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் விரும்பும் இடத்தில், நிலம் அளிக்கப்படும். வீடுகட்ட இடம் , வீடுகட்ட பணம், நிலத்திற்கான இழப்பீட்டு பணத்தையும் அரசு அப்பகுதி மக்களுக்கு அளிக்க உள்ளது.



    விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொது நோக்கமாகும். விமான நிலையத்தை அருகில் அமைக்கும் போது சரக்கு போக்குவரத்து அந்நிய செலாவணி அதிகரிக்கும், தமிழக அரசின் வருவாய் பெருக்க முடியும். 13 கிராமங்களில் மொத்தம் 1005 வீடுகள் விமான நிலையத்திற்காக கையைகப்படுத்தப்பட உள்ளன. மாற்று வீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தான் நேரடியாக மக்கள் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Chengalpattu, Tamilnadu government

    அடுத்த செய்தி