கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி- தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

சத்குரு

கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும்,பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும். இதனை கண்காணிக்க மாவட்டத்தோறும் சிறப்பு குழு அமைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

     தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வரவேற்பு தெரிவித்துள்ளார். கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர், சத்குரு தனது ட்விட்டர் பதிவில் ‘‘வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள இதயத்தை பிழியும் விஷயம்: சிறு குழந்தைகள் அநாதை ஆக்கப்படுவது. அரசு நிதியுதவி இக்குழந்தைகளின் நீடித்த நிலைத்த பராமரிப்புக்கு உதவியாய் இருக்கும். சமூகம் அவர்களை அன்புடன் கருணையுடன் அரவணைத்து பேணட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: