• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. நவம்பர் 1ம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள்?

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. நவம்பர் 1ம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள்?

Marina Beach

Marina Beach

ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடற்கரைக்கு செல்லலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. நிலைமைக்கு தக்கபடி அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கோவில்களை அனைத்து நாட்களில் திறப்பதற்கும், கடற்கரைகளில் ஞாயிற்றுக்கிழமையும் செல்லலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும், நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்களுக்கு தடை:

நாளை (அக்டோபர் 15) முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதே நேரத்தில் திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read: தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!

கடற்கரைக்கு செல்ல அனுமதி: 

மேலும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள்?

மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தலாம்.

Also Read:   முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் – அம்பலப்படுத்திய கடிதம்!

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள், உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்

மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம், காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: