Unlock: தேநீர், பேக்கரி, பலகார கடைகளை திறக்க அனுமதி: தமிழக அரசு உத்தரவு!

இனிப்பு கடை

தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

  • Share this:
தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்து வரும் ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேநீர் கடைகள், பேக்கரி, பலகார கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம் எனவும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகள், பேக்கரி, பலகார கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பரவல் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் மேற்கண்ட கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Also Read:   அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் தந்தை!

ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

“பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கார வகைகள் கடை


பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை.

Also Read:   வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா: ஓராண்டில் சொத்து மதிப்பு பாதியாக சரியக் காரணம் என்ன?

மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம்.  இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.” இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: