• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

  • Share this:
mmeநாளை (அக்டோபர் 15) முதல் தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் வழிபாட்டு தலங்களில் அனுமதி தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அத்தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை வலியுறுத்தி கடந்த வாரம் முக்கிய கோவில்கள் முன் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

Also Read: உலகின் சிறந்த 750 நிறுவனங்களில் இந்தியாவில் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ்!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருவிழாக்களுக்கு தடை:

அதே நேரத்தில் திருவிழாக்கள், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும், நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read:   முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் – அம்பலப்படுத்திய கடிதம்!

இதனிடையே, நாளை முதல் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிப்பாட்டு தலங்களுக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் அனைத்து ஏற்பாடுகள் செய்ய உத்தரவு.

நாளை தமிழகத்தில் உள்ள கோவில்களில் முறையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் நேரில் கண்காணிக்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: