Home /News /tamil-nadu /

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு ரூ 4.10 கோடி நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு ரூ 4.10 கோடி நிதி ஒதுக்கீடு

அமைச்சர் கயல்விழி

அமைச்சர் கயல்விழி

ஆணையம் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்பட அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் - ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்துக்கு 48 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான 4 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக,  தமிழகத்தின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களின் அரசியலமைப்பு சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் செயல்பாட்டுக்கு வந்து 10 மாதங்கள் ஆன பின்பும், " போதிய பணியிடங்கள் நிரப்பப் படவில்லை என்றும், எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

    நிதி ஓதுக்கீடு செய்யாமல் ஆணையம் எவ்வாறு தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் என்று கேள்வி எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  

     



    இந்நிலையில், ஆணையம் தன்னிச்சையாக செயல்பட 48 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான 4 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,தலைவர், துணை தலைவர், நான்கு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலாளர்(முழு பொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டு கடந்த  13.10.2021 முதல் செயல்பாட்டில் உள்ளது.தற்போது, ஆணையம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் புதிதாக 48  பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியிடங்களுக்கான நிதியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதன்படி, ஒரு துணைச் செயலாளர், ஒரு சார்புச் செயலர், ஒரு கணக்கு அலுவலர், 2 பிரிவு அலுவலர், 2 கோர்ட் மாஸ்டர், 4 உதவி பிரிவு அலுவலர், 4 தனிச்செயலாளர், 4 நேர்முக உதவியாளர்கள், 2 எழுத்தர், 2 உதவியாளர், 2 தட்டச்சர், ஒரு பதிவுறு எழுத்தர் ஆகிய பணியிடங்கள் பணி மாறுதல் மூலமும், ஒரு கணிப்பொறி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளனர். மேலும் 6 ஓட்டுநர், 11 அலுவலக உதவியாளர், 2 இரவு காவலர் மற்றும் 2 தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்கள் பணியாளர் முகமை மூலமாகவும் நிரப்பப்படும்.

    இதையும் வாசிக்க: மதுவால் சீரழியும் குடும்பங்கள்.. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்- தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

    இதற்கான, ஆணைய நிர்வாக செலவாக ஆண்டுக்கு ரூ. 2 கோடியே 30 இலட்சமும், மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு ரூ.1 கோடியே 80 இலட்சமும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆணையம் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்பட அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: National SC ST commission, Tamilnadu, Thol. Thirumavalavan

    அடுத்த செய்தி