• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர முடிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் (கோப்புப் படம்)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் (கோப்புப் படம்)

Cyclone Gaja | கஜா புயலால் வீட்டை இழந்தோருக்கு சொந்த நிலத்தில் வீடுகட்டியிருந்தோருக்கு அங்கேயேயும், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலத்தை ஒதுக்கி வீடுகளை கட்டித் தரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 1,00,000 வீடுகளுக்கு பதிலாக மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பில் புதிய வீடு கட்டித் தர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், வீடுகளை முழுவதுமாகவும், பகுதியாகவும் இழந்து தவித்து வருகின்றன. மாநிலத்துக்கே சோறு போட்ட டெல்டா மக்கள், கூரை கூட இன்றி மழையிலும், வெயிலிலும் அகதிகள் போல் வாழ்ந்துவருகின்றனர். சேதப்பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு லட்சம் வீடுகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், அதற்கு பதிலாக 1,00,000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழகத்தில் தற்போது, மாநில அரசு மூலம் பசுமை வீடு திட்டமும், மத்திய அரசு பங்களிப்புடன், பிரதமரின் வீடு கட்டும் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. பசுமை வீடுகளைப் பொறுத்தவரை, சூரியமின் வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் தலா 2,10,000  ரூபாயில், 300 சதுர அடியில் கட்டித் தரப்படுகின்றன.

Cyclone Gaja | கஜா புயலால் முற்றிலும் உருக்குலைந்த கோடியக்கரை கிராமம்
கஜா புயலால் முற்றிலும் உருக்குலைந்த நாகை மாவட்டத்தில் உள்ள வீடுகள்


புயல் பாதித்த 4 டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித்தர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு அதிகாரிகள் கூறும்போது, வீடிழந்த 1,00,000 குடும்பங்களுக்கு, மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்புடன் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் தருகின்றன. மத்திய அரசு 72,000 மாநில அரசு 48,000 என 1,20,000 ரூபாய், ஒதுக்கப்படுகிறது. மாநில அரசு கூடுதலாக, 50,000 வழங்குகிறது. மேலும் கட்டுமானக் கூலியாக 20,000 ரூபாயும் தரப்படுகிறது.

கஜா புயலால் நாசமடைந்த வீடுகள்


புயல் பாதித்த வீடுகளைப் பொருத்தவரை, தற்போது வழங்கப்படுவதை விட கூடுதல் தொகை ஒதுக்கப்படவுள்ளதாக கூறிய அதிகாரிகள், தூய்மை இந்தியா மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் சேர்த்து, சற்று அதிக தொகையை ஒதுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய குழுவினர், பாதிப்புகளை நேரில் பார்த்ததால் மத்திய அரசு அதை எதிர்க்காது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் அமலகாவுள்ள இத்திட்டத்தில், சொந்த நிலத்தில் வீடுகட்டியிருந்தோருக்கு அங்கேயே 300 சதுர அடி வீடு கட்டித் தரப்படும் என்றும் சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசே நிலத்தை ஒதுக்கி வீடுகளை கட்டித் தரும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also see... ஆசையாய் காதலித்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த பட்டதாரி வாலிபர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: