அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

கோவிட் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க தகுதியானவர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி எடுக்க ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழக அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா தற்போது மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது எனவும், இந்த சூழலில் மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக முதியோர்களின் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அனைத்து மக்களும் கட்டாயமாக முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  Also read... மத வழிபாடுகளை பாதிக்காதவாறு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

  மேலும், கோவிட் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க தகுதியானவர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மேலும் மாநிலத்தில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: