ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழர், தமிழ் கலாசாரம் ,தமிழ்மொழி மீது பற்றும் மரியாதையும் காந்தியடிகள் கொண்டிருந்தார் என்றும், பழமையான தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறியதாக ஆளுநர் தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, காந்தியடிகளை நாம் மறந்து வருகிறோம். காந்தியை நாம் மறவாமல் அவர் நினைவை நாம் தொடர்ந்து போற்றிட வேண்டும் காந்தியின் கொள்கை வழிதான் நம்நாட்டின் வளர்சி உள்ளதாக தெரிவித்தார். காந்தியை மறப்பது நம் பெற்றோரை மறப்பது போன்றது என்று தெரிவித்த ஆளுநர், காந்தியைப்    போல வேறுயாரும் இந்நாட்டை புரிந்துகொண்டது கிடையாது என்றும் தெரிவித்தார்.

மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவராக காந்தியடிகள் திகழ்நார். பல வேற்றுமை கொண்ட இந்நாடு ஒருமுகமாக காந்தியை ஏற்றுக்கொள்கிறது என்றும் தெரிவித்தர்.

இதையும் வாசிக்கஎஸ்எஸ்சி போட்டித் தேர்வுக்கென தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ முயற்சிகள் சில

நாட்டின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாக உணர்ந்த காந்தியடிகள், கடைநிலை மனிதனை பற்றி அதிகம் சிந்தித்ததாக கூறினார்.தமிழர், தமிழ் கலாசாரம் ,தமிழ்மொழி மீது பற்றும் மரியாதையும் காந்தியடிகள் கொண்டிருந்தார் என்றும், பழமையான தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

Published by:Salanraj R
First published:

Tags: Gandhi Jayanti, Governor