• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துரைக்கண்ணுவின் மரணம் அ.தி.மு.கவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

துரைக்கண்ணுவின் மரணம் அ.தி.மு.கவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    முதலமைச்சர் பழனிசாமி தாயார் மறைவையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக, அக்டோபர் 13 அன்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, உடனடியாக அவர் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவை காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சைகள் தரப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தநிலையில், நேற்றிரவு 11.15 மணிக்கு மேல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    அவருடைய மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் குறித்த செய்தி கேட்டு வேதனையடைந்தேன். துரைக்கண்ணு, அவருடைய எளிமை, நேரடியாக பேசும் தன்மை, பணிவான குணம், விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அவருடைய முனைப்பின் காரணமாக நன்கு அறியப்பட்டவர்.


    அவர், பாபநாசம் தொகுதியிலிருந்து 2006, 2011, 2016 என மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறை அமைச்சகத்தை முழு ஈடுபாட்டுடன் அவருடைய தனித்த அடையாளத்துடன் செதுக்கினார். அவருடைய அகால மரணம் தமிழ்நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.கவுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாக இருக்கும். அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: