• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு: மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்- முதல்வர்!

7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு: மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்- முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 10ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களும், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் ஆகியவற்றில் 350 மாணவர்களும் பயன்பெற உள்ளனர் என்று முதலமைச்சர் பேசினார்.

  • Share this:
    7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு கீழ் தொழிற் படிப்பு பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    7.5சதவிகித இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டொர் இதில் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’போட்டிகள் நிறைந்த உலகில் முன்னணி அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்கிற ஏக்கம் மறைந்து மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் காணப்போகும் நாள் இன்று.  கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலக்கு படிப்பு என்பதாகவே இருக்க வேண்டும் என்று புரட்சியாளர் லெனின் கூறியுள்ளார். வேலைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக மாணவர்கள் மாற வேண்டும்’ என்று கூறினார்.

    இதையும் படிங்க: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி : உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு


    தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ‘அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட இயக்கத்தின் நோக்கம். நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 10ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களும், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் ஆகியவற்றில் 350 மாணவர்களும் பயன்பெற உள்ளனர். 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் தொழிற்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்’ என்று அறிவித்தார்.

    மாணவர்களின்  விடுதிகட்டணம், கல்லூரி கட்டணம், கலந்தாய்வு கட்டணத்தை அரசு ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: