முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'ஆட்டோ ஓட்டுநர்களுக்கு செல்போன் செயலி' தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்!

'ஆட்டோ ஓட்டுநர்களுக்கு செல்போன் செயலி' தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தல்!

ஆட்டோ

ஆட்டோ

மாநகரங்களில் செல்போன் செயலி மூலம் தனியார் நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பை சுரண்டுவதை கட்டுப்படுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக சீமான் சாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் விலை உயர்வால் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வருமானமின்றி தவித்து வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநகரங்களில் செல்போன் செயலி மூலம் தனியார் நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுநர்களின் உழைப்பை சுரண்டுவதை கட்டுப்படுத்தாமல் அரசு வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஆட்டோ கட்டணமே இன்று வரை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆட்டோக்களுக்கு பயண கட்டணத்தை எரிபொருள் விலைக்கேற்ப நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும், அதே நேரத்தில் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டியதும் அரசின் கடமை என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கேரள அரசைப் போல, தனியார் பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசும் ஆட்டோ முன்பதிவு செயலிகளை உருவாக்கி, குறைந்த கமிஷன் தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Auto, Kerala, Seeman, Share Auto