பிளஸ்2 தேர்வு முடிவு: 238 அரசுப்பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி

news18
Updated: May 16, 2018, 6:09 PM IST
பிளஸ்2 தேர்வு முடிவு: 238 அரசுப்பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி
அரசு பள்ளி
news18
Updated: May 16, 2018, 6:09 PM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 238 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 91.1சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 87.7 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6,754 மேல்நிலை பள்ளிகள் உள்ள நிலையில்,  அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 1,907 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக 238 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான அளவு கல்வித்தரம் இல்லை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறமையற்றவர்களாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக தமிழக மக்களிடையே பரவி வருகிறது. அந்த கருத்தை முறியடிக்கும் வகையில் இந்த ஆண்டு பல நூறு அரசு பள்ளி மாணவர்கள் பிள்ஸ் 2 தேர்வில்  100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்