ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக பேச்சாளர்.. அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அரசு உத்தரவு!

ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய திமுக பேச்சாளர்.. அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அரசு உத்தரவு!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.என்.ரவி

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.என்.ரவி

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படும் புகாரில், திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியை மிரட்டும் வகையில் பேசியதாக வீடியோ வெளியானது.

இதுகுறித்து ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காமல், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, RN Ravi, Tamilnadu government