முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு இளைஞர் நீதி குழுமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு இளைஞர் நீதி குழுமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்கள். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

  • 1-MIN READ
  • Last Updated :

    2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் மற்றும் விதிமுறைகள் படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப் பட உள்ளனர்.

    குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தைகளின் உளவியல் மனநல மருத்துவம் , சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருந்தால் வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்கள். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

    இதற்கான விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://erode.nic.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் ( செய்தி வெளியீடு நாளில் இருந்து 15 நாட்கள் வரை ) கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்படுமாறு விண்ணப்பிக்கலாம்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

    69, காந்திஜி ரோடு, முன்னாள் படை வீரர் மாளிகை,

    இரண்டாவது தளம், ஈரோடு - 638 001

    தொலைபேசி எண்: 0424 - 2225010

    பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2021/12/2021120743.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    First published: