முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காலின் உள்ளே சிக்கிய கற்களை அகற்றாமல் தையல் போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்.. நோயாளி வேதனை

காலின் உள்ளே சிக்கிய கற்களை அகற்றாமல் தையல் போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்.. நோயாளி வேதனை


காலின் உள்ளே சிக்கிய கற்கள்

காலின் உள்ளே சிக்கிய கற்கள்

மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்யப்பட்டு 5க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Pudukkottai

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவரின் காலின் உள்ளே சிக்கிய கற்களை அகற்றாமல் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன். இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மதிவாணனுக்கு, அங்கிருந்த ஊழியர்களே காலில் தையல் போட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி இந்துள்ளது இதனையடுத்து அறந்தாங்கி தனியார் மருத்துவமனை சென்றுள்ளார் மதிவாணன். அவருக்கு மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தையல் போட்ட பகுதியின் உள்ளே 5 க்கும் மேற்பட்ட கற்கள் இருந்துள்ளது.

மதிவாணன் விபத்தில் சிக்கியபோது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே போயிருந்ததை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யாமல் தையல் போட்டுள்ளனர்.

ALSO READ | பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா இல்லையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்நிலையில் மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்யப்பட்டு 5க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டது.  மருத்துவர் பணியில் இருந்தபோதும் ஊழியர்கள் சிசிச்சை மேற்கொண்ட அலட்சியமே இச்சம்பவத்திற்கு காரணம் என்றும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Pudukkottai