Home /News /tamil-nadu /

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை - தமிழக அரசு புதிய முடிவு

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை - தமிழக அரசு புதிய முடிவு

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதன்முறையாக கல்வி உதவித்தொகை  வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ டி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு முதல்முறையாக கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 100 மாணவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனரகம் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் அந்த மாணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக வரும் 31-ஆம் தேதிக்குள் இந்த கல்வி தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் 100 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

Also see:

Published by:Yuvaraj V
First published:

Tags: ITI Students

அடுத்த செய்தி