மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓமந்தூரார் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அபோது அவர் கூறுகையில்,
சென்னை ஐஐடி-யில் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்கள் அந்த வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
அவர்களுள், இதுவரை மருத்துவமனை செல்ல வேண்டிய நிலையில் யாரும் இல்லை. ஐ.ஐ.டி.யில் நுழைவு இடங்களில் காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அதை செய்ய வலியுறுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் மாணவர்கள் கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. எனவே, மக்கள் பதற்றப்பட வேண்டாம். 1.8 லட்சம் படுக்கைகள் கொரோனா உச்சத்தில் இருந்த போது தயாராக இருந்தது. தற்போதும் 1.1 லட்சம் படுக்கைகள் உள்ளன. இதில் 18 பேர் மட்டுமே படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.சி.யு.வில் இரண்டு பேரும், ஆக்சிஜன் வசதியுடன் ஏழு பேரும் மட்டுமே உள்ளனர் என்று கூறிய ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி. நிகழ்விலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், நேற்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
Read More : 'உடலில் எங்கு தொட்டாலும் வலி '.. வினோத நோயால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி - உதவிக்காக தவிப்பு
இந்நிலையில், சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் 3 பேருக்கு சிலதினங்களுக்கு முன்னர் லேசான கொரேனா அறிகுகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, தொற்று உறுதியான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது.

ராதாகிருஷ்ணன்
Must Read : முதலமைச்சர் ஸ்டாலினை கர்மவீரர் காமராஜர் போல நினைக்கிறேன்..- பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேச்சு
அதனைத் தொடர்ந்து, மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஐஐடியில் மட்டுமே 30 பேருக்கு 3 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.