திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு 1,000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு

திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்கள், உள்ளிட்ட பல்வேறு வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு 1,000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த பகுதிகளில் உள்ள வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்க 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் 1,666 திருநங்கைகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க...


காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பின்தங்கிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முதல்வரிடம் கோரிக்கை

மேலும் தூய்மைப்பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க 28 லட்ச ரூபாயும், பழங்குடியின மக்களுக்கு 6 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading