தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு.. விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் என்று தெரியுமா?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.

தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு.. விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் என்று தெரியுமா?
தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு
  • Share this:
தூய தமிழில் பேசுவோருக்கு ரூ, 5000 பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூ, 5000 பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தகுதியோடையோர் அதற்கான https://sorkuvai.com/ என்ற இணையதள பக்கத்தில் பரிசுத் தொகை விண்ணப்பப் படிவத்தினை பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.இயக்குநர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்,
முதல் தளம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,
தரமணி,
சென்னை – 600 113.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி 15.08.2020

தூயதமிழ்ப் பற்றாளர்களுக்கான பரிசுத் தொகை விண்ணப்பப் படிவம் :  https://docs.google.com/viewerng/viewer?url=https://www.sorkuvai.com/files/FormsLink/ThuyathamizhPattralarPrizeForm-2020.pdf
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading