ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் அவர் பயன்படுத்திய அசையும் சொத்துக்களின் விவரங்களை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அரசுடமையாக்கப்பட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் இருப்பதாகவும், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
அத்துடன், ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி, 10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளது.

அரசிதழ்
மேலும் படிக்க...
கொரோனா சிகிச்சைக்காக 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை - முதல்வர் நாராயணசாமி தகவல்
அதன் விவரங்கள்
1. தங்கம் - 4 கிலோ 372 கிராம்
2. வெள்ளி - 601 கிலோ 472 கிராம்
3. வெள்ளி உலோகங்கள் - 162 பொருட்கள்
4. தொலைக்காட்சி பெட்டி ( TV) - 11
5. பிரிட்ஜ் - 10
6. ஏ. சி - 38
7. மர சாமான்கள் - 556
8. சமையல் பாத்திரங்கள் - 6514
9. காட்சி பெட்டிகள் ( SHOWCASES ) - 1055
10. பூஜை பாத்திரங்கள் - 15
11. உடை, துணி, செருப்பு - 10, 438
12. தொலைபேசி, கைப்பேசிகள் - 29
13. புத்தகங்கள் - 8376
14. நினைவுப்பரிசுகள் - 394
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.